B.T Assistant
*மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இனி இருக்குமா?*
*நாஞ்சிலார்*
*சமீபத்திய உபரி பணி நிரவல் சார்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் பட்டியல்கள் வெளியாகியுள்ளன*.
*இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் உபரியாக அறிவிக்கப்பட்டவர்கள் அனைவருமே பட்டதாரி ஆசிரியர்கள்.அது மட்டுமல்ல இவர்களில் பெரும்பாலானோர் மேல்நிலை பள்ளியில் பணிபுரிபவர்களே.*
*உயர்நிலைப்பள்ளியில் குறைந்த பட்சம் ஐந்து பாட பட்டதாரி ஆசிரியர்கள் கண்டிப்பாக தேவை என்ற நியதி கூட இல்லாமல்,அவர்களுக்கு உரிமைப்பட்ட 6-10 வகுப்பு களிலிருந்து உபரியாக்கப்பட்டதுதான் வேதனையிலும் வேதனை.*
*மேல்நிலைப் பள்ளிகளில் 6-12 வகுப்புகள் கண்டிப்பாக இருக்கும். இங்கு இடைநிலை ஆசிரியர் பணியிடம் இருக்கிறதோ இல்லையோ பட்டதாரி ஆசிரியர் பணியிடமும்,முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் அவசியம் ஒதுக்கப்பட்டிருக்கும்.இது நாள் வரை 6-8,9-10,11-12 என மூன்று அட்டவணையாக போட்டு பணி நிர்ணயம் செய்து உபரி ஆசிரியர்கள் கணக்கிட்டு வந்தனர்.தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதாவது மேல்நிலை வகுப்புகளில் பணிபுரியும் ஒவ்வொரு முதுகலை ஆசிரியருக்கும் 28 பாடவேளைகள் உள்ளதா எனப்பார்த்து அவ்வாறு இல்லையெனில் உயர்நிலைப் பிரிவில் தேவையான பாடவேளைகள் ஒதுக்கி வழங்க வேண்டும்.*
*உதாரணமாக முதுகலை கணித ஆசிரியர் ஒருவருக்கு 12ம் வகுப்பில் 7 பாட வேளைகளும் 11ம் வகுப்புக்கு 7 வகுப்புகளும் ஒதுக்கிட முடியும்.தற்போது இவருக்கு மேலும் 14 பாட வேளைகள் தேவைப்படுகிறது.இதற்காக இவருக்கு 9,10ம் வகுப்பில் 14 பாட வேளைகள் ஒதுக்கப்படுகிறது.இவ்வாறே பிற பாடங்களை கை யாளும் தமிழ், ஆங்கிலம், அறிவியல் என பாடவேளைகள் ஒதுக்கி முடித்து முதுகலை ஆசிரியர்களுக்கு பணியிடம் உபரி என வராமல் பாது காக்கப்படும்.*
*அதுபோல் அங்கு இடைநிலை ஆசிரியர் எத்தனை பேர் உள்ளனரோ அவர்களுக்கு 6-8 வகுப்பில் எத்தனை பாட வேளைகள் தேவைப்படும் என கணக்கிட்டு பாட வேளைகளை ஒதுக்கி முடிக்கின்றனர்.*
*அதன்பின்னரே 6-10 வகுப்புகளில் எந்தெந்த பாட வேளைகள் ஆசிரியர் இல்லாமல் உள்ளனர் என பார்த்துஒவ்வொரு வகுப்புக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடவேளைகள் ஒதுக்குகின்றனர்.இங்கு தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.இடைநிலை ஆசிரியர்கள் இருந்தால் அங்கு 6-8 வகுப்புகளில் பாட வேளைகள் இருக்காது.9ம் வகுப்பு பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் எடுத்திருப்பார்கள்.மீதம் இருப்பது பத்தாம் வகுப்பு மட்டுமே. அங்கு ஒவ்வொருவருக்கும் 28 பாட வேளைகள் கிடைக்க வாய்ப்புகள் குறைவு.இதனால் சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரியாகின்றது.இடைநிலை ஆசிரியர்கள் இல்லாத மேல்நிலை பள்ளிகளில் மட்டும் 6-8 வகுப்பு பாட வேளைகள் பட்டதாரி ஆசிரியருக்கு கிடைக்கும்.மொத்தத்தில் இடைநிலை ஆசிரியர்களும்,முதுகலை ஆசிரியர்களும் உபரி பட்டியலில் வராமல் தப்பி விடுகின்றனர்.இந்நிலை தொடர்ந்தால் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் சொந்த வீடுபோல் பணிபுரிந்து வந்த நிரந்தர பணியிடங்கள் யாவும் இனி வாடகை வீடுபோல் எந்த பள்ளிக்கு எப்போது மாற்றப்படும் என்ற அச்ச நிலைக்கு கொண்டு செல்வதோடு,மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத நிலைக்கு மாற்றி விடும்.*
Comments
Post a Comment